Protect சங்கத்தினைப் பற்றி
“Protect” என்பது பதிவு செய்யப்பட்ட ஒரு தொழிற்சங்கமாகும். இது ஒரு குடை அமைப்பாக செயல்பட்டு, முறையான தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் மத்தியில் தலையீடுகள் மற்றும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. முறைசாரா துறை தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில், முறைசாரா துறை ஊழியர்களுக்கு கண்ணியமான பணி நிலைமைகளை உத்தரவாதப்படுத்துவதும், அந்த தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புப் பலன்களை வழங்குவதும் மற்றும் அவர்களுக்கு நலத்திட்டங்களைக் கிடைக்கச் செய்வதும் என்பன எங்களது முக்கிய நோக்கங்களாகும். மேற்கூறியவற்றை அடைவதில் மிக முக்கியமான படியாக, ILO C189 மற்றும் ILO C190 ஐ இலங்கையில் அங்கீகரிப்பதற்கும் அந்த வழிகாட்டுதல்களை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச நிறுவனங்களிடையே பரப்புரை நடவடிக்கைகள் மற்றும் பிரச்சாரங்களை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
சுருக்கமான வரலாறு
பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கமாக 2016 இல் நிறுவப்பட்டது. ஆரம்ப இலக்குகள் ஏற்கனவே செயல்படும் தொழிற்சங்கங்கள் மற்றும் ஒரு குடை அமைப்பாக செயல்பட வேண்டும் என்பதுவும், அந்த சமயத்தில் முற்றிலுமாக தொழிற்சங்கமயப்படுத்தப்படாத முறைசாரா தொழிலாளர்கள் உட்பட, தொழிற்சங்கங்களற்ற துறைகளில் புதிய கிளைகளை நிறுவுதல். ஆரம்பத்திலிருந்தே தொழிற்சங்கமானது, வீட்டுப் பணியாளர்களிடையே செயல்படத் தொடங்கியது. 2020 ஆம் ஆண்டில், அதிர்ஷ்ட லாபச் சீட்டு விற்பனை முகவர்கள், தையல்காரர்கள், புடவைக்கடைகளில் வேலை செய்பவர்கள் மற்றும் கண்ணியமான வேலை நிலைமைகள் இல்லாத கடைகளில் வேலை செய்பவர்கள், பேக்கரிகள் மற்றும் உணவகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் போன்ற முறைசாரத் துறை ஊழியர்களை ஒழுங்கமைக்கத் தொடங்கினோம்.
இலக்குகள்
- இலங்கையில் முறையான மற்றும் முறைசாரா துறை ஊழியர்களை ஒழுங்கமைத்தல் மற்றும் ஒன்றிணைத்தல்.
- இலங்கையில் முறையான மற்றும் முறைசாரா துறை ஊழியர்களை ஒழுங்கமைத்தல் மற்றும் ஒன்றிணைத்தல்.
- இலங்கையில் முறையான மற்றும் முறைசாரா துறை ஊழியர்களை ஒழுங்கமைத்தல் மற்றும் ஒன்றிணைத்தல்.
எமது நோக்கம்
இலங்கையின் முன்னணி தொழிற்சங்கமாக விளங்குவதே எமது நோக்கமாகவதுடன், அது நாட்டில் உள்ள அனைத்து வகையான தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் அவர்களின் நியாயமான மற்றும் மனிதாபிமானமிக்க தொழில் நிலைமைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான போராட்டத்தில் வலுவூட்டுதாகும். நாம் அந்த உழைக்கும் குடும்பங்களின் குரலை தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஒலிக்கச் செய்வதேயாகும்.
எமது குறிக்கோள்
தொழிலாளர்கள் மற்றும் அவர்களது உழைக்கும் குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும் பணியிடத்தில் பொருளாதார நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதும், சமூகத்திற்கான சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நீதி, பொருளாதார வளர்ச்சியுடன் சுற்றுச்சூழல் சமநிலைக்கு உத்தரவாதம் அளிக்கும் நிலைமையினை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்.
அடுத்த தலைமுறை தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்களாக எங்கள் உறுப்பினர்களை கல்வி, பயிற்சி என்பவற்றையளித்து உருவாக்குவோம். மேலும் நம் வாழ்க்கையைப் பாதிக்கும் அனைத்துப் பிரச்சினைகளிலும் எழுந்து நிற்க அவர்களுக்கு பலமளிப்போம். எங்கள் உறுப்பினர்களின் உடல், உளவியல், தார்மீக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்துவோம். ஏனைய தேசிய மற்றும் சர்வதேச தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக பங்காளிகளுடன் கூட்டணிகள், கூட்டாண்மைகள், ஒற்றுமை இயக்கங்களை உருவாக்குவோம்.
எமது செயற்பணி
- தொழிலாளர்களுக்கு சிறந்த ஊதியம் கிடைக்கச் செய்வதன் மூலம் அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல்.
- தொழிலாளர்களுக்கான சிறந்த பணிச்சூழலைப் பாதுகாத்தல்.
- தொழிலாளர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை உறுதி செய்தலும் வேலை வாய்ப்புகளை குறைக்கும் எந்தவொரு முயற்சியையும் எதிர்ப்பதும்.
- தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள், ஊழியர்களின் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, பணிக்கொடைத் திட்டங்கள் மற்றும் பிற சலுகைகள் போன்ற ஓய்வூதியப் பலன்களை பாதுகாத்தல்.
- தொழிலாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பு மற்றும் சுகாதார நலத்திட்டங்களை வழங்குதல்.
- பதவி உயர்வு மற்றும் பயிற்சிகளுக்கான வாய்ப்புகளை உறுதி செய்தல்.
- ஆட்குறைப்பு மற்றும் பணிநீக்கங்கள் போன்றவற்றிலிருந்து தொழிலாளர்களின் தொழில்களைப் பாதுகாத்தல்.
- தொழிலாளர்களிடையே ஒழுக்கம், சுயமரியாதை, கண்ணியம் ஆகியவற்றை வளர்த்தல்
- தொழில் தகராறுகள் தொடர்பில் தொழிலாளர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குதல்.
- நிர்வாகத்தில் தொழிலாளர்களின் பங்களிப்பைப் பாதுகாக்க, நாம் என்ன முடிவுகளை அடைய விரும்புகிறோம் (அவை அளவிடக்கூடியவையா?)
எமது முக்கிய செயற்பாடுகள்
- C189 மற்றும் C190ஐ அங்கீகரிப்பது தொடர்பான பரப்புரை நடவடிக்கைகள்
- வீட்டுப் பணியாளர்களுக்கான கல்வித் திட்டங்கள்
- சங்கமயமாவதன் முக்கியத்துவம் பற்றிய நிகழ்ச்சிகள்
- வீட்டுப் பணியாளர்களுக்கான கண்ணியமான வேலை விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம்
- வீட்டுத் தொழிலாளர்களுக்கான கண்ணியம் மற்றும் தொழிலாளர் உரிமைகள் பற்றிய திட்டங்கள்
- வீட்டுப் பணியாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள்
- தலைமைத்துவ மற்றும் தொடர்பபாடல் பயிற்சிப் பட்டறைகள்
- மென் திறன்கள் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிப் பட்டறைகள்
- பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் துன்புறுத்தல் பற்றிய பயிற்சிப் பட்டறைகள்
- C189 மற்றும் C190 பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள்
எங்கள் அணி
PROTECT என்பது ஊதியம் பெறும் அனைத்து தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொழிற்சங்கமாகும். நீங்கள் நிரந்தர ஊழியராகவிருந்தாலும், பாதுகாப்பற்றவராக இருந்தாலும், ஒப்பந்த ஊழியராகவிருந்தாலும் அல்லது சாதாரண நிலையான நேர ஊழியராக இருந்தாலும் உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். உங்கள் நீண்ட கால இலக்குகளை அடைய இன்றே எம்முடன் இணையுங்கள்.
ஹரிப்பிரிய ஹெட்டியாராச்சி
கருப்பையா மைதிலி
கல்ப மதுரங்க
ஜீன் நிஷாந்தி
லசந்த குமார
திலினி நிமேஷா
குழு அங்கத்தவர்கள்
பேபி சங்கீதா
நிஷானி குமுதினி
