Preaload Image

NEWS ROOM

ஹேஷாலினிக்கு நீதி தாமதமானது ஏன்? டயகமவில் Protect சங்கம் கோரிக்கை!

DSC 4098 800x535

சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனின் இல்லத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த போது மர்மமான முறையில் மரணமடைந்த மகள் ஹேஷாலினிக்கு நீதியை  வழங்குமாறு வலியுறுத்தி இன்று (டி.10) டயகமவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டயகம மேற்கு இலக்கம் 02 வித்தியாலயத்திற்கு அருகில் Protect சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹிஷாலினியின் கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்நாட்டு மக்களுக்கு வாழ்வதற்கான உரிமையையாவது அரசாங்கங்கள் வழங்கத் தவறியது ஏன்? என்று வினாவெழுப்பினார்கள்.  ஹேஷாலினியின் மர்மமான மரணம் இந்த கேள்வியை சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

ஹிஷாலினியின் மரணம் குறித்து முறையான மற்றும் நியாயமான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்றும், அரசியல் தலையீடுகள் ஏதும் இல்லாமல் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் கலந்து கொண்ட ஹேஷாலினியின் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் முடிவுக்குக் கொண்டுவருமாறு அரசாங்கத்தை வலியுறுத்திய அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இது போன்ற நிலையில் இருக்கும்போது பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து பாராளுமன்றம் எவ்வாறு வெளிப்படைத்தன்மையுடன் இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினர். அந்த நம்பிக்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மட்டுமே ஹேஷாலினிக்கு நீதி கிட்டும் என எதிர்ப்பார்ப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதன் போது தெரிவித்தனர்.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn