Preaload Image

வீட்டுப் பணியும் ஒரு வேலைதான்

வீட்டுப் பணி என்பது என்னவென்பது குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 189 சாசனத்தின் கீழ் இவ்வாறு வரைவிலக்கணப்பட்டுள்ளது.  “வீடுகளில் அல்லது வீடொன்றில் ஆற்றப்படுகின்ற பணி” அதற்கமைய நீங்கள் யாதேனும் வேதனம் ஒன்றை எதிர்பார்த்து யாதேனுமோர் வீடொன்றில் அல்லது வீடுகளில் ஆற்றுகின்ற, வீட்டைச் சுத்தப்படுத்தல், உணவு சமைத்தல், ஆடைகளைக் கழுவுதல் மற்றும் துணிகளைத் தேய்த்தல், பிள்ளைகள் அல்லது குடும்பத்தின் வயோதிகர்கள் அல்லது நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளல், வீட்டுத்தோட்டச் செய்கை, வீட்டைப் பாதுகாத்தல், குடும்பத்திற்காக வாகனம் ஓட்டுதல், வீட்டிலுள்ள செல்லப் பிராணிகளைக் கவனித்துக் கொள்ளல் போன்ற அனைத்து செயற்பாடுகளும் வீட்டுப் பணி எனக்கருதப்படும்.

இலங்கையினுள்ளே வீட்டுப் பணியில் ஈடுபடுகின்ற ஏராளமானோர் இருப்பதுடன் அதில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாய் உள்ளனர்.

அவ்வாறு வீட்டுப் பணியில் ஈடுபடுகின்றவர் ஒருவருக்கு மற்றைய தொழில்களில் கிடைக்கின்ற வாழ்வதற்கேற்ற ஆகக்குறைந்த சம்பளம், உரிய வேலை நேரம், உரிய வேலை நாட்கள், சமூகப் பாதுகாப்பு அல்லது சிறந்த தொழில் நிபந்தனைகள் போன்றவற்றுக்கான எவ்வித உரிமையும் இல்லை.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 189 சாசனத்தின் கீழ் வீட்டுப் பணியும் கண்ணியமான தொழிலாளக 2011ஆம் ஆண்டிலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும், இலங்கையினுள்ளே இன்னமும் 189 சாசனம் அங்கீகரிக்கப்பட்டு வீட்டுப் பணியாளர்களுக்கும் கண்ணியமான தொழில் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

அதனால்,  வீட்டுப் பணியாளர்களுக்கு அவ்வுரிமையினை வென்று கொடுப்பதே ப்ரொடெக்ட் சங்கம் என்ற முறையில் எமது முக்கிய நோக்கமாகும். அதற்காக இலங்கையில் உள்ள அனைத்து வீட்டுப் பணியாளர்களும் ஒருங்கிணைவதும் அணிசேர்வதும் கட்டாயமான விடயமாவதுடன் ஒரு தொழிற்சங்கம் என்ற முறையில் நாம் அதற்கு தலைமைத்துவத்தினை வழங்குவோம்.

ப்ரொடெக்ட் ஆகிய நாம் அனைத்து வீட்டுப் பணியாளர்களினதும் தொழில்களைப் பாதுகாக்கவும், வேலையின் போதான அநீதிகள் மற்றும் தடைகளுக்கெதிராகவும் செயற்படக்கூடிய பலமிக்க தொழிற்சங்கமாகும். அதனால் வாருங்கள். வந்து எம்முடன் கைகோர்த்துக் கொள்ளுங்கள்.

ப்ரொடெக்ட் சங்கம்